crossorigin="anonymous">
உள்நாடுபொது

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 37 = 44

Back to top button
error: