600 ஏக்கர் அளவிலான காணிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி
திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் நேற்று (5) மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான பிரதேசங்களை இணங்க அப்பிரதேசங்களில் போக பயிர்செய்கை செய்வதற்குரிய ஏற்பாட்டின் கீழ் காணி விடுவிப்பு நடைபெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
இதன் மூலம் மாவட்டத்தினுடைய உற்பத்தியை அதிகரித்து நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செலுத்தக் கூடியதாக அமையும்.பயிர் செய்ய முடியுமான ஒவ்வொரு பிரதேசத்திலும் உற்பத்தியை மேற்கொண்டு நாட்டினுடைய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தினுடைய மூல நோக்கங்களில் ஒன்றாக காணப்படுவதா இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.