ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை இரத்துச் செய்யுமாறு ஐ.தே.க., ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுதந்திர இலங்கையின் உதயத்துடன் சேனாநாயக்க, இலங்கையின் அடையாளத்தை உருவாக்கினார். சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கியர் அனைவரும் ஒரே அடையாளத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை எமது தேசிய கீதத்தில் ‘ஒரு தாயின் பிள்ளைகள்’ என்ற வார்த்தை மூலம் உறுதிப்படுத்தினார். நமது இது இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அடையாளத்துடன் முன்நோக்கிச் சென்று குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். ஆனால், தற்பொது தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயல்திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி அதற்கு முரணாக, தடையாக இருக்கிறது.
இந்நாட்டில் பல் வகை மக்களுக்கு தனித்தனியான சட்டங்களைக் கொண்டிருந்தது. பண்டைய சிங்கள இராச்சியத்தின் சட்டமே இன்று கண்டிய சட்டம் என அழைக்கப்படுகின்றது. இது 700 ஆண்டுகளுக்கும் மேலானது, ரோமன் டச்சு சட்டம் 600 ஆண்டுகளுக்கும் மேலானது.
‘தேச வளமைச் சட்டம்’ என்பது சுமார் 500 வருடங்கள் பழமையான ஒரு பழைய சிறப்புச் சட்டமாகும். இது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே சொந்தமானது. தென்னிந்தியாவில் கூட பொருந்தாது. மேலும், முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள சட்டம் நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அது மாத்திரமன்றி, கிழக்கு மாகாணத்தில் முக்குவா என்று அழைக்கப்படும் ஒரு இனக்குழு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை வாழ்ந்தது. அவர்களுக்கும் தனிச் சட்டம் இருந்தது. 20ஆம் நூற்றாண்டில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுடன் கலந்து வாழ்ந்து தற்போது அந்த இனக் குழுமம் அழிந்துள்ளது.
கடந்த காலத்திலிருந்து பல்வேறு இனக்குழுக்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் பண்புகள் ஆகியவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், அவற்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த இனக் குழுமங்களுக்கான தனிச் சிறப்புச் சட்டங்களை நீக்குவது முழு சட்டக் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு சமமாக இருக்கும். ஆனால் அந்த தனிச் சிறப்புச் சட்டங்களில் உள்ள விதிகளை மறுசீரமைக்கப்பட வேண்டும். குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.
திருமணமான பெண்களின் உரிமைகள் தேசவளமைச் சட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் குறையை நாம் சரி செய்ய வேண்டும்.
முஸ்லிம் சட்டத்தின் கீழ், திருமணமான ஆண்களுக்கு நான்கு மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையும், திருமணமான பெண்களின் உரிமையும் குறைக்கப்பட்டு, அதைத் திருத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தால் 2019 இல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்தை நீதியமைச்சர் அலி சப்ரி முன்னெடுத்துச் செல்லும் வேளையிலேயே, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் பெண், ஆண் சமத்துவம் என்பது அனைத்து துறைகளிலும் காணப்படுவதில்லை, அதற்கான சட்டங்களும் கொண்டு வரப்பட வேண்டும். அதன்படி, நாட்டின் பெரும்பான்மையான பெண்களுக்கு இப்பகுதிகளில் சட்டங்களை உருவாக்குவது ஒரு பிரச்சனையல்ல. இது தொடர்பாக மக்களிடையே கலந்துரையாடல் ஒன்று உருவாகியுள்ளது.
எனினும், நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து, சிதைத்து வருகிறது. சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது சட்ட மாஅதிபர் ஜனாதிபதியிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறலாம்.
இதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதன் பின்னர் நீதி அமைச்சின் மற்றும் குறிப்பாக சட்ட மாஅதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்க வேண்டும். அமைச்சரவையில் விவாதிக்காமல் நீதி அமைச்சரையும், சட்ட மாஅதிபரும் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நடவடிக்கை கேலிக்கூத்தான செயலாகும்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கமைய இது அரசியலமைப்புக்கு முரணான செயலாகும். இது பாராளுமன்றத்தின் செயல்பாடு.
எனவே, நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடிய ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைக்கிறோம்.