இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (09) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, முற்பகல் 11.00 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் 2021 ஜூலை 20, ஒக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று அறிக்கைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.