கண்டி – அக்குறணை பிரதேசத்தில் வசிக்கும் வெளிநாடு செல்ல இருப்பவர்கள் பலரின் வேண்டுகோளுக்கு அமைய மொடேர்னா (Mordena) முதல் தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் (09) தெரிவித்தார்
இவர்கள் தமக்கான முதல் தடுப்பூசிகளை எதிர் வரும் 2021 நவம்பர் 11ம் திகதி வியாழக்கிழமை அலவத்துக்கொடை தேசிய பாடசாலையில் காலை 7.00 மணி தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாடு செல்வதற்கு தடுப்பூசிகளை பெற எதிர்பார்த்து இருப்பவர்கள் நவம்பர் 09ஆம் திகதி மற்றும் 10ஆம் திகதிகளில் அதாவது இன்று மற்றும் நாளை காலை 9.00 மணி தொடக்கம் பகல் 2.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அக்குறணை பிரதேச சபைக்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தடுப்பூசிகளை பெறுவதற்கு பதிவு செய்ய வரும்பொழுது கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை, விசா, (Passport copy, NIC copy, visa or appointment copy) ஆகிய ஆவணங்களை உடன் எடுத்து வருமாறும் வேண்டப்பட்டுள்ளனர்
தடுப்பூசிகளை பெறுவதற்காக ஏலவே பதிவு செய்து டோக்கன் பெற்று இருந்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக 11 ஆம் திகதி வியாழக்கிழமை அலவதுகொடை தேசிய பாடசாலையில் தமக்கான முதல் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.