crossorigin="anonymous">
உள்நாடுபொது

தொம்பேமட பிரதேச வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

கேகாலை – ரம்புக்கனை, தொம்பேமட பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று (09) அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தொம்பேமட வீதியில் தம்புள்ளை, வேகட பிரதேத்திலுள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு நிலச்சரிவு ஏற்பட்டதில் தாய், அவரது மகள் மற்றும் உறவு பெண்பிள்ளை ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் நால்வர் இருந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த தந்தை (40), ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜாங்கனையைச் சேர்ந்த 35 வயதுடைய தாய் மற்றும் அவரது 8 வயது மகள் மற்றும் 13 வயதுடைய உறவு பெண் பிள்ளை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சடலங்கள் தற்போது ரம்புக்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மீட்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 + = 60

Back to top button
error: