உர இறக்குமதி செய்த சீன நிறுவனத்திற்கும் அதன் உள்ளூர் பிரதிநிதிக்கும், இலங்கையின் அரச வங்கியினால் கடன் கடிதத்தின் கீழ் பணம் செலுத்துவதற்கு எதிரான தடையுத்தரவு நவம்பர் 19 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) கொழும்பு வாணிப நீதிமன்றத்தினால், குறித்த தீங்கு விளைவிக்கும் பக்டீரியா கொண்ட உரத்தை விநியோகிக்கும் Qingdao Biotech Group Co. Ltd. எனும் சீன நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் முகவர் நிறுவனம் மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக குறித்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உர நிறுவனத்தினால் பெற்றிருந்த குறித்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு வாணிப நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம், இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரி நஷ்டஈடு கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்திருந்தது.