ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 06ஆம் திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானிக்கு அமைய, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான செயலணியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது
இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பத்குணராஜா, ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
11 பேர் கொண்ட குறித்த செயலணியில் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரநிதிகள் இடம்பெறவில்லையென பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் நியமிக்கப்பட்ட குறித்த செயலணியில் உள்ள ஏனைய 11 உறுப்பினர்கள்
1. கலகொடஅத்தே ஞானசார தேரர் (தலைவர்)
2. பேராசிரியர் தயானந்த பண்டார
3. பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன
5. என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன
6. சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே
8. எரந்த நவரத்ன
9. பாணி வேவல
10. மெளலவி மொஹொமட் (காலி உலமா சபை)
11. விரிவுரையாளர் மொஹொமமட் இந்திகாப்
12. கலீல் ரஹூமான்
13. அஸீஸ் நிசார்தீன்