ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக 30 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு காணப்படுவதாகவும் அவர் நேற்றைய தினம் ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க வரலாற்றில் முதல் தடவையாக கல்வித் துறைக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நூற்றுக்கு 7.51 வீதம் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுமார் 25 வருட காலமாக தொடரும் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காணும் வகையில் பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீண்டகாலமாக நீடித்த ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.