இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய 829 பேர் நேற்றைய தினம் (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, எவ்வித காரணங்களும் இன்றி வீதிகளில் பயணித்த 39 வாகனங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன், அதில் பயணித்தவர்களையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 180 பேரும். நிக்கவரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 79 பேர் மற்றும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 72 பேரும் ஆவர்
மேல் மாகாணத்திற்கு வருபவர்கள் மற்றும் வெளியேறுகின்ற 14 இடங்களில் பொலிஸ் வீதித் தடைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இதுவரையிலும் 15,595 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.