crossorigin="anonymous">
வெளிநாடு

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2013 மார்ச் 14-ம் தேதி சீன அதிபராக பதவியேற்றார். கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, தற்போது 2-வது முறையாக அதிபராகப் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2018 மார்ச் மாதம் சீன நாடாளுமன்றம் கூடியது. அதில் அதிபர் பதவிக் கால வரம்பை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அதிபர் பதவிக்கான 10 ஆண்டு வரம்பு, சட்டபூர்வமாக நீக்கப்பட்டு, அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய குழு பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் கூடியது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 400 பேர் பங்கேற்றனர். இதில் தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறையாக அதிபர் பதவியில் தொடர வழிவகுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆண்டு கால வரலாற்றில் கட்சியின் நிறுவனர் மா சேதுங், அதிபர் டெங்ஜியோபிங்குக்கு பிறகு 3-வதுமுறையாக இத்தகைய தீர்மானத்துக்கு மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சியின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு மத்தியில் நடத்தப்பட உள்ளது. அதில் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு 3-வது முறை அதிபராவது உறுதி செய்யப்படும். தற்போது 68 வயதாகும் ஜி ஜின்பிங், தனது ஆயுள் முழுவதும் சீனாவின் அதிபராக நீடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 69 + = 77

Back to top button
error: