கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு, இன்று (13) சனிக்கிழமை இரவு 8 மணி முதல், (14) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 28 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது..
கொழும்பு மா நகர சபை அதிகாரப் பிரிவுகளுக்குட்பட்ட பம்பலப்பிட்டி, கிருலப்பனை, பாமன்கடை, வெள்ளவத்தை, கறுவாத்தோட்டம், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை அண்டிய பகுதிகளான ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே மற்றும் கடுவலை மா நகர சபைகள், மஹரகமை மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகள் ஆகிய அதிகாரப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அம்பத்தளையில் இருந்து கோட்டே வரையிலான நீர் விநியோக பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் நீர்க் கசிவு காரணமாக, இவ்வாறு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.