இலங்கையின் பிரதான எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது அதனை விற்பதற்கான ஒரு படிமுறையென தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவித்ததுடன், எரிபொருள் சுத்திகரிப்பை மீண்டும் மேற்கொள்வதற்கு தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுத்தருமாறு தொழிற்சங்க உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
பெட்ரோலிய பொது ஊழியர் சங்கம், வணிக கைத்தொழில் மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் பெட்ரோலியக் கிளை உள்ளிட்ட தரப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.