இந்திய மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்
இந்திய மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ள தாகவும், இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் பிரதமர் மோடி நேற்று (19) அறிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் போராட்டம் தொடர்பான கண்ணோட்டம் வருமாறு:
ஜூன் 5, 2020: 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவ தற்கான அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்தது.
ஜூன் 6, 2020: அவசரச் சட்டங்களைஎதிர்த்து பஞ்சாபில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடக்கம்.
செப். 14, 2020: நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் அவசரச் சட்டங்கள் தாக்கல்.
செப். 17, 2020: அவசரச் சட்டங்கள் மக்களவையில் நிறைவேற்றம்.
செப். 20, 2020: குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் அவசரச் சட்டங்கள் நிறை வேற்றம்.
செப். 23, 2020: சட்டங்களுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராட 31 விவசாய அமைப்பு கள் முடிவு.
செப். 27, 2020: 3 விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.
அக். 8, 2020: விவசாயிகளுடன் பேச்சு நடத்த 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்தது.
நவ. 23, 2020: டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் சங்கம்.
டிச. 3, 2020: விவசாய அமைப்புகள், மத்திய அரசுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை.
டிச. 8, 2020: நாடு தழுவிய பந்த் நடத்த விவசாயிகள் அமைப்பு அழைப்பு.
டிச. 9, 2020: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவசாயத் தலைவர்கள் சந்திப்பு.
டிச. 16, 2020: பிரச்சினையைத் தீர்க்க குழு அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை.
டிச. 21, 2020: 24 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தனர்.
ஜன. 7, 2021: குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு.
ஜன. 11, 2021: விவசாயிகள் போராட்டத்தைத் தவறாக கையாள்வதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.
ஜன. 12, 2021: வேளாண் சட்டங்களுக்கு காலவரையற்ற தடையை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும் 4 பேர் கொண்ட உச்ச நீதிமன்றக் குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது.
ஜன. 22, 2021: தோல்வியில் முடிந்தது விவசாயிகள், மத்திய அரசு இடையிலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை.
ஜன. 26, 2021: டெல்லியில் நுழைந்த விவசாயிகள் போலீஸாருடன் மோதல், செங்கோட்டையில் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்.
ஜன. 28, 2021: காஸிப்பூர் போராட்டத்தின்போது பாரதீயகிஸான் யூனியன் தலைவர் ராக்கேஷ் டிகைத் உணர்ச்சி கரமான வகையில் பேச்சு.
ஜன. 29, 2021: முஸாபர்நகரில் நடைபெற்ற மகாபஞ்சாயத்தில் ஆயிரக்கணக்கான விவசாயி கள் பங்கேற்பு.
பிப். 3, 2021: விவசாயிகள் போராட்டத்துக்கு பருவநிலை மாறுபாட்டு ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆதரவு, டூல் கிட்டையும் வெளியிட்டார்.
பிப். 13, 2021: டூல்கிட் விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவியை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
பிப். 18, 2021: நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தது சம்யுக்தா கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்).
பிப். 23, 2021: திஷா ரவிக்கு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன்.
மார்ச் 5, 2021: நிபந்தனையற்ற முறையில் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என பஞ்சாப் சட்டப் பேரவையில் தீர்மானம்.
மார்ச் 6, 2021: டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியது.
மே 27, 2021: போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறை வடைந்ததையொட்டி கருப்பு தினத்தை அனுஷ்டித்த விவசாயிகள்.
ஆக. 7, 2021: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் கிஸான்சன்சத் (விவசாயிகள் நாடாளு மன்றம்) நிகழ்ச்சியில் பங்கேற்க 14 எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு.
நவ. 19, 2021: விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.(இந்து)