பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கால்பந்தாட்ட கிண்ணத்தை சீஷெல்ஸ் அணி கைப்பற்றியது
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால் பந்தாட்டச் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் ,இறுதிக்கட்டத்தில் தண்டனைகள் Penalties மூலம் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சீஷெல்ஸ் அணி வெற்றியீட்டியது.
இலங்கை அணியுடனான இந்தப் போட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்றது.
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான ஜியானி இன்பென்டினோ (Gianni Infantino) இதில் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
போட்டியின் 85ஆவது நிமிடம் வரை இலங்கை அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் முன்னிலையில் வகித்தது. எனினும் 85 மற்றும் 90ஆவது நிமிடங்களில் சீஷெல்ஸ் அணி வீரர்கள் கோல் அடித்ததினால்; ஆட்டநேர முடிவின் போது இரு அணிகளும் மூன்று கோல்களை பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் Penalties அவகாசம் வழங்கப்பட்டது. இதன்போதே சீஷெல்ஸ் அணி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
தொடரின் தங்க காலணி விருது நான்கு போட்டிகளில் ஏழு கோல்கள் அடித்த இலங்கை அணியைச் சேர்ந்த வசிம் ராஸிற்கு வழங்கப்பட்டது. தங்க பந்து விருதை இலங்கை அணியின் தலைவர் சுஜான் பெரேரா பெற்றுக்கொண்டார்.
இறுதிப்போட்டியில் வெற்றியீட்டிய சீஷெல்ஸ் அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.