crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபொது

கொவிட் தொற்று சந்தேகிக்கப்படும் மாணவர் தொடர்பில் வழிகாட்டல்

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அல்லது படசாலை ஊழியர்கள் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

1. கொவிட் தொற்று தொடர்பான அறிகுறிகள் இனங்காணப்படும் தொற்றாளரை அல்லது சந்தேகத்திற்குரிய நபரை ஏனையோரிடமிருந்து அகற்றி பாடசாலையின் நோயாளர் அறை அல்லது தனிமைப்படுத்திய அறையொன்றில் வைத்தல்.

2.1 குறித்த அறை பாதுகாப்பானதாகவும், காற்றோட்டம் மிக்காக இருக்க வேண்ம். குறித்த மாணவர் அல்லது ஊழியர் முகக் கவசம் அணிந்திருப்பது அவசியம். அவர்கள் பரிவுடனும், அன்புடனும் நடாத்தப்பட வேண்டும்.

2.2 மாணவர்/ மாணவியாக இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்குத் தெரியப்படுத்தி, சாத்தியமாகுமாயின், அவர்களை பாடசாலைக்கு அழைத்தல்

2.3 நோய் அறிகுறியுள்ள மாணவரை அல்லது ஊழியர் தொடர்பில், சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அல்லது பொதுச் சுகாதார அதிகாரிக்கு (PHI) அறிவித்தல்.

2.4. சந்தேகிக்கப்படும் COVID-19 தொற்றாளர் தொடர்பில், பாடசாலை முகாமைத்துவ கட்டமைப்பை MOH பின்பற்ற வேண்டும்.

2.4. அறிகுறிகள் உள்ள தொற்றாளருக்கு கொவிட்-19 தொடர்பான ரெபிட் அன்டிஜன் சோதனையை, அப்பகுதியின் MOH மூலம் ஏற்பாடு செய்தல் அல்லது பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை ரெபிட் அன்டிஜன் சோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லல்.

2.5. மாணவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர் எப்போதும் பெற்றோர்/ பாதுகாவலர்/ ஆசிரியருடன் இருக்க வேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − 51 =

Back to top button
error: