crossorigin="anonymous">
உள்நாடுபொது

அ. இ. மக்கள் காங்கிரஸ் 2022 வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது இன்று (22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும், இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது

கட்சியின்  அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை முன்வைத்து கருத்துக்களை தெரிவித்ததன் அடிப்படையில், இன்று (22) பாராளுமன்றில் நடைபெறும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பிலும், இறுதி வாக்கெடுப்பிலும், வரவுசெலவுத் திட்டத்தினை எதிர்த்து வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது

வாக்கெடுப்பின் பின்னரான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  அரசியல் அதிகார சபைக் கூட்டம், இன்று இரவு 08 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 8

Back to top button
error: