crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை

திருகோணமலை மாவட்ட சிறு வியாபார தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேதன விவசாய உற்பத்திப்பொருட் சந்தை இன்று( 22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் முற்றுமுழுதாக சேதனப்பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்த உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்காக விடப்பட்டிருந்தன.

குறித்த தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேதன விவசாய உற்பத்தி தொடர்பில் பயிற்சிகளினை நிறைவு செய்த தொழில் முயற்சியாளர்களுக்கு அரசாங்க அதிபரினால் உரிய சான்றிதழ் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. peace winds Japan நிறுவனம் இதற்கான ஒத்துழைப்பை வழங்கியது.

சேதனப்பசளை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தரமானதாகவும் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். இதில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளர்களுக்கு கூடிய வருமானம் கிடைக்க கூடியதாக இருப்பதுடன் நுகர்வோரும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள கூடிய சந்தர்ப்பம் இதன்மூலம் ஏற்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மத்திய வங்கியின் பிரதேச முகாமையாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.பிரளாநவன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − = 92

Back to top button
error: