முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தில் 16 வயது மற்றும் 17 வயது உடையவர்களிற்கான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் பைசர் தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நேற்று (22) காலை மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையால் கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற குறித்த கொவிட் தடுப்பு மருந்தேற்றலில் க.பொ.த.சாதாரணம் மற்றும் க.பொ.த.உயர்தரமாணவர்களுக்கே குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் இன்று (23) அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.