crossorigin="anonymous">
வெளிநாடு

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி

இந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை நடைபெற்றுவருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.(நக்கீரன்)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 − 49 =

Back to top button
error: