பராராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இன்று 2021, நவம்பர் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.