crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயண படகு விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழபு

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பயண படகு விபத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர். அதற்கமைய இப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மேலுமொரு சிறுமி திருகோணமலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த முஹம்மது றபீஸ் பாத்திமா நிபா எனும் 6 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (27) உயிரிழந்துள்ளார்.

இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்திருந்ததோடு, 18 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: