crossorigin="anonymous">
வெளிநாடு

தென்னாபிரிக்காவிலிருந்து வந்த13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஒமிக்ரான் பாதிப்பு

தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கான சோதனை செய்த 61 பயணிகளில் அவர்களும் அடங்குவர். கொரோனாவின் புதிய திரிபு வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு கடந்த புதன்கிழமையன்று தென்னாப்பிரிக்கா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − = 45

Back to top button
error: