பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பம்
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டி நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“Affected Women’s Forum | பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி. நஜீமியாவின் ஏற்பாட்டில் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.றிம்ஸியா ஜஹான் அவர்களின் தலைமையில்இன்று இன்று (02) பிரதேச சபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கிராம மட்டத்தில் Affected Women’s Forum | பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பினால் “Willing Club | விருப்பமுள்ள கழகம்” ளை அமைத்து சுயதொழிலில் ஈடுபடும் பெண் முயற்சியாளர்களுக்குத் தேவையான இயலுமை விருத்தி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்விற்கு Affected Women’s Forum | பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திருமதி. சுபாஜினி – பொருளாதார அபிவிருத்தி ஆலோசகர், திருமதி. எஸ்.கமலவாணி – நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கிவைத்தனர்.