இலங்கை முழுவதும் இன்று (03) மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.
பிரதான மின் விநியோக பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 3 மணித்தியாலங்கள் வரை எடுக்கலாம் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பாவனையாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.