முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி ஆரம்பம்
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் இன்று (03) வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் திட்ட வரைவுகளை வடமாகாண ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், நகர அபிவிருத்தி சபை பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மதத் தலைவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பிரத்யேக செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், நகர அபிவிருத்தி சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.