இலங்கை முழுவதும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு 2021 டிசம்பர் 23ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, 2022 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2021 டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 2022 ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 2021.12.23 முதல் 2021.12.27 வரையான நாட்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு திருத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.