![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/Shiraz-yunus2-e1638585423472-780x304.jpg)
ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிக்காததுடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என பிரதமர் ஊடக பிரிவு (03) தெரிவித்துள்ளது
ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிப்பதாக தெரிவித்து முன்வைக்கும் கருத்துகளுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
அத்துடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை. அவர் வெளியிடும் கருத்துகள் தனிப்பட்ட ரீதியானதுடன், பிரதமர் அல்லது பிரதமர் அலுவலகம் அக்கருத்துகளை ஏற்கவில்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது