![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/parliament1-780x450.jpg)
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க தீர்மானித்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (04) சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்காக சபைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதனால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை வரவு செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ளாது சபை அமர்வுகளை புறக்கணிக்கப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
இன்று காலை நாடாளுமன்ற சபைக்கு வெளியில் லொபியில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடந்த மோதல் சம்பவமொன்றையடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.