![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/Power-Cut-780x469.jpg)
இலங்கையில் எதிர்வரும் 3 – 4 நாட்களுக்கு பி.ப. 6.00 மணி – பி.ப. 9.00 மணி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை, நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள 3 மின் உற்பத்தி கட்டமைப்புகளிலிருந்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் 900 MW மின்சக்தி விநியோகமும் வழமை போன்று இடம்பெறும் வரை இவ்வாறு மின்சாரம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.