crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு

பாகிஸ்தான் – சியல்கோட் பிரதேசத்தில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை தியவதனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக .வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் சடலம் நாளை கொண்டுவரப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது நெருங்கிய உறவினர்களால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, வெளிநாட்டு அமைச்சு இந்நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றது.

இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் தொழில் தருனருடன் வெளிநாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது.

பாகிஸ்தானியர்கள் இலங்கையர்களிடம் சிங்கள மொழியில் மன்னிப்புக் கோருவதையும் காணமுடிந்தது.

இலங்கை பிரஜை பிரியந்த படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் லாகூரில் பாகிஸ்தானியர்கள நேற்று (04) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 13 − 8 =

Back to top button
error: