![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/aa68.jpg)
இலங்கை வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கரையொதுங்கியுள்ளது
இந்திய தமிழகத்தின் ஆலம்பத்தூர், சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் (47) என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரமே இவ்வாறு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வடபகுதிக் கடலில் ஆறு நாட்களிற்குள் இனந்தெரியாத ஆறு சடலங்கள் கரையொதுங்கின. 06 சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.