இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, மரணம் 13, மருத்துவமனையில் 100 பேர்
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/Screenshot-816-e1638756033839-780x470.png)
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (பிஎன்பிபி) ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் அப்பகுதியின் வீடுகள், பாலங்கள் இடிந்துவிழுந்தன. எரிமலை வெடித்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏஎன்ஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள செமேரு எரிமலை சனிக்கிழமை (04) வெடித்ததால் அப்பகுதியின் வீடுகள், பாலங்கள் இடிந்துவிழுந்தன. செமேரு எரிமலை வெடித்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காயமடைந்த நிலையில் 100 பேர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் கவலைக்கிடனமான நிலையில் உள்ளனர்.
கடந்த சிலநாட்களாகவே எரிமலை குமுறி வந்தது. இந்நிலையில் திடீரென எரிமலை வெடித்துச் சிதறியதில் ஊருக்குள் ஆறாக நெருப்புக்குழம்பு பாய்ந்தது. சுமார் 40 அடி ஆயிரம் உயரத்திற்கு எரிமலை சாம்பல் படர்ந்தது. இதனால் பல கிராமங்கள் எரிமலை சாம்பலால் சூழ்ந்துள்ளன. எரிமலை வெடித்துச் சிதறிய சத்தம் கேட்டதை அடுத்து வீடுகளுக்குள் இருந்த மக்கள் அலறிஅடித்தபடி பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.
பிஎன்ப்பிபி தகவலின்படி, 900 க்கும் மேற்பட்ட மக்கள் பேரிடர் மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஊருக்குள் எரிமலை சாம்பல் சேறாக பரவிவருதை அடுத்து மக்கள் வெளியேறும் காட்சி இதற்கிடையே 7 பேர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கனமழையும் பெய்துவருவதால் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் நெருப்புக்குழம்புடன் சேர்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இந்தோனேசியாவில் 120 க்கும் மேற்பட்ட எரிமலைகள் கனன்று கொண்டே உள்ளன, அவை பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளதால் நில அதிர்வு தாக்கம் ஏற்படுகிறது புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.(இந்து)