கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்.மரணிக்கும் போது அவருக்கு 83 வயதாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரேவை நீக்க அக்கட்சியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கியமை மற்றும் அப்பதவிக்கு மற்றுமொரு தலைவரை நியமிப்பதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 யில் சத்திய பிரமாணம் செய்துக் கொண்டரர்.