பிரியந்த குமார தியவடனவின் இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07)நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இது தெரிவிக்கப்பட்டது
இது தொடர்பாக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரியந்த குமார தியவடனவின் இழப்பு குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.