யாழ்ப்பாணத்தில் உள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அகற்ற கோரி இன்று (07) பிரதேவாசிகள் விநியோக களஞ்சியத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் கொட்டடி வைத்தியசாலை வீதி களஞ்சியம் முன்பாகவே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு இந்த ஆர்ப்பாட்டத்தில் ” மக்களின் உயிரா பண பலமா, அச்சமற்ற வாழ்விடம் வேண்டும், உயிர் அச்சுறுத்தலான எரிவாயு களஞ்சியத்தை உடனே அகற்று, தரமற்ற எரிவாயுக் கசிவிற்கு யார் பொறுப்பு போன்ற வாசகங்களை தாங்கி நின்றனர்.