crossorigin="anonymous">
உள்நாடுபொது

நிலைமையை கருத்திற் கொண்டு பயண கட்டுப்பாடு தீர்மானம் எடுக்கப்படும்

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் நாளாந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

மேலும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நிலவும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அந்த நிலைமையின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும்.

கடந்த ஒரு வாரத்திற்குமேல் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் வெற்றி அல்லது தோல்வியை ஜூன் 1 ஆம் தேதிக்குப் பின்னர்தான் அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 + = 36

Back to top button
error: