இலங்கை உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வளாகத்தின் கட்டிடத்தை சீன அரசின் முழு ஆதரவுடன் புதுப்பிக்க 2012 முதல் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன.
இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் நிகழ்வு இன்று (07) நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நீதி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மற்றும் நீதி அமைச்சின் சீன பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான ஆலோசகர் LI Guangjun ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்களும் கலந்துகொண்டார்.