வெளிநாடு
பிரியந்த குமாரவின் உயிரை காக்க முயன்ற மாலிக் அத்னனுக்கு விருது
பாகிஸ்தான் – சியல்கொட்டில் இலங்கையரான பிரியந்த குமாரவின் உயிரைக் காக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் ‘துணிச்சலுக்கான விருது’ வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தானியரான மாலிக் அத்னன் நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி ‘ Tamgha-i-Shujaat’ என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.