வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இன்று (07) காலமானார். அவருக்கு, அனுதாபம் தெரிவித்து வடமேல் மாகாணத்தில் பல இடங்களில், அனுதாப பதாகை வைக்கப்பட்டுள்ளன.
வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பணியாட் தொகுதியினர், அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து பதாகை வைத்திருந்தனர். இந்த பதாகையில், வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸமில்லின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே பற்றி பதாகையில் பெயர் சரியாகவே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.