எரிவாயு நிறுவனங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நேற்று (07) முதல் புதிய எரிவாயு தொகுதிகளை சந்தைக்கு விநியோகித்துள்ளன.
லிட்ரோ நிறுவனத்தின் சிலிண்டர் மூடியில் வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்திலான நிறுவனத்தின் வர்த்தக குறியீடு (Logo) பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.
லாப் நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் மூடியில் நீல நிற பின்னணியில்; மஞ்சள் நிறத்திலான நிறுவனத்தின் லோகோ பொலித்தீன் முத்திரையுடன் கூடிய புதிய எரிவாயு தொகுதிகள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.