60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே. கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட மண்முனை வடக்கு பொது சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட பைஸர் தடுப்பூசிகளில் முன்னுரிமை அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் 7 தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பாலமீன்மடு, சின்னஊறணி, கருவப்பங்கேணி, இருதயபுரம் கிழக்கு ஆகிய நான்கு பொதுசுகாதார பிரிவுகளில் நேற்று (07) பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.