இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதானி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து
5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்பு
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
இந்தியா – நீலிகிரி மாவட்டம், குன்னூர் அருகே இன்று (08) விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் மொத்தம் 14 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை சூளூர் விமானநிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக இன்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன. அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.
இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீலிகரியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்தான் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததாகவும், இந்த விபத்துக்குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை ட்விட்டர்மூலம் உறுதி செய்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.
1. தலைமைத் தளபதி பிபின் ராவத்
2. பிபன்ராவத் மனைவி மதுலிகா ராவத்
3. பிரிகேடியர் எல்எஸ் லிட்டர், எஸ்எம், விஎஸ்எம்
4. லெப்டினல் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
5. என்கே.குருஷேவக் சிங்
6. என்கே.ஜிதேந்திர குமார்
7. விவேக் குமார்
8. எஸ்.வி.சாய் தேஜா
9. ஹாவ் சப்தல் மற்றும் 5 விமானிகள், பணியாளர்கள்
இருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(இந்து)