பாகிஸ்தானின் – சியல்கோட் சம்பவத்தில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக ஒரு இலட்ச்சம் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 2.2 கோடி) வழங்க, சியல்கோட் வர்த்தக சமூகம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ட்விற்றர் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாகிஸ்தான் சியல்கோட் வர்த்தக சமூகம் உயிரிழந்த பிரியந்த குமாரவின் மனைவிக்கு அவரது கணவர் பெற்று வந்த சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கும் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பில் விடுத்துள்ள ட்விற்றர் அறிவித்தலில் இதை உறுதிப்படுத்தியுள்ளது.