crossorigin="anonymous">
உள்நாடுபொது

மடவளை பிரதேசத்தில் விற்கப்படும் பாணின் நிறை குறைவு – மக்கள் விசனம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கண்டி – பாத்தும்பறைத் தொகுதியிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் விற்கப்படும் பாணின் நிறை குறைவாக இருப்பதாக நுகர்வோர்கள் (12) தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஒரு பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தெரிவித்த போதும் மடவளை நகரக் கடைகளில் விற்கப்படும் பாண்களின் நிறை 270 கிராம் முதல் 290 கிராம் வரையே காணப்படுகின்து.

இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

80 ரூபாவிற்கு விற்கப்படும் பாணின் நிறை 285 கிராம் அளவைக் காட்டுவதை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: