கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா
கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கி வைக்கும் விழா தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்ப்பாட்டில் அதிகார சபையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பாத்திமா சினோஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அதிகார சபையின் தலைவர் எம் . சி. எம். சுனில் ஜெயரத்தன தலைமையில் சாய்ந்தமருது லீ மெடிரியன் மண்டபத்தில் இன்று (15) இடம்பெற்றது .
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் 20 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அத்துடன் ஆரம்ப தொழில் முயற்சியாளர்களைஊக்குவிக்கும் வகையில் மேலும் 20 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது
சிறிய உற்பத்தி நிறுவனத்துக்கான் விருது , சிறந்த விவசாய உற்பத்தி நிறுவனத்துக்கான விருது , விசேட நிறுவனத்துக்கான விருது மற்றும் ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்கள் என்பன தொழில் முயற்சியாளர்களுக்கு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது .
இதன்போது வன விலங்கு பாதுகாப்பு வன வள மேம்பாடு இராஜாங்க அமைசசர் விமல வீர திசாநாயக்க மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர்கள், அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.