வெளிநாடு
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு சிறை
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவின் பரோலை நீதிமன்றம் இரத்து செய்திருக்கிறது.
சிறைக்கு வெளியில் இருந்த காலத்தை, அவருக்கு விதிக்கப்பட்ட 15 மாத தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கக்கூடாது என்றும் பிரிட்டோரியா நீதிமன்றம் கூறியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் ஜூமாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜூலையில் அவர் சரணடைந்தார்.
79 வயதான அவர், மருத்துவக் காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். இப்போது பரோல் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும்.(பிபிசி)