ஹுவாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர்நேற்று (31) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ‘இடுகம’ சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.
இதன்போது தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஹுவாவி நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு பாராட்டினார்.
ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி அவர்கள் இதன்போது ஹுவாவி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக இலங்கையில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தை பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.
சுமார் 10000 மாணவர்களை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையில் திறமையானர்வளாக மாற்றுவதே இந்த சமூக பொறுப்பணர்வு திட்டத்தின் நோக்கமாகும்.
குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்தத குலரத்ன, ஹுவாவி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவர் சென் மன்ஜி, ஹுவாவி நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யீ, மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் கிறிஸ்டோஃப் லீ, வணிக மற்றும் நிறுவன பிரிவுகளின் தலைவர் ஷியாஓ ஹுவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.