லிட்ரோ நிறுவனம் நான்கு நாட்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரையும் சந்தைக்கு விநியோகிக்கவில்லை. இதனால் பண்டிகைக்காலங்களில் உணவகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை உருவாகியுள்ளது.
Mercaptan உரிய தரத்தில் இல்லாமையே அதற்கான காரணமாக கடந்த சனிக்கிழமை கொழும்பை அண்மித்த EPIC BALTA கப்பலில் கொண்டுவரப்பட்ட 3200 மெட்ரிக் தொன் LP சமையல் எரிவாயுவை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிராகரித்தது.
மாலைத்தீவிலிருந்து கொழும்பிற்கு வருகை தந்த மற்றுமொரு கப்பலிலுள்ள 2000 மெட்ரிக் தொன் சமையல் சமையல் எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்காக மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.