2022 ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் 51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரு வருட பயிற்சி கால பயிற்சிகளை நிறைவு செய்த 42,500 பேருக்கு முதல் கட்டமாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் எஞ்சிய தரப்பிற்கு ஒரு வருட கால பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களுக்கு எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவோரில், விரும்பிய 22,000 பேர் ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்ள முடியும், இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.